குடியுரிமை சட்ட திருத்ததால்

இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு வராது


 பிரதமர் நரேந்திர மோடி உறுதி 


புதுடெல்லி: டிச.23- திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு ஆகியவற்றால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு வராது என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். டெல்லியில் அனுமதி பெறாத 1,797 குடியிருப்பு பகுதிகளை முறைப்படுத்தி பட்டா வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திரமோடி நேற்று பங்கேற்றுபயனாளிகளுக்கு பட்டா பதிவேடுகளை அளித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: 


குடியுரிமைசட்டத்தினால் அனைத்து முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டுகாவலில் அடைக்கப்படுவார்கள் என்ற வதந்திகள் காங்கிரஸ்கட்சி மற்றும் அதன் நண்பர்களான சில நகர்ப்புற நக்சல்களால் பரப்பப்படுகின்றன. நீங்கள் கற்ற கல்விக்கு மதிப்பளித்து குடியுரிமை சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை படித்துப் பாருங்கள். டெல்லியில் உள்ள அனுமதியற்ற குடியிருப்பு பகுதிகளை இப்போது முறைப்படுத்தியபோது உங்கள் மதம் என்ன என்று கேட்டோமா? நீங்கள் எந்த கட்சியை சார்ந்தவர்கள் என்று கேட்டோமா? 1970, 1980களில் இந்த் நாட்டில் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை காட்டுங்கள் என்று கேட்டோமா? கல்விக்கு இதனால் இங்கு வாழும் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருமே பலனடைந்துள்ளனர். என்னை தேர்தலில் சந்திக்க துணிசில்லாதவர்கள் மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு நாங்கள் குடியுரிமை சட்டத்தை திருத்தியாத பொயயான வதந்திகளையும் போலி வீடியோக்களயும் பரவவிட்டு நாட்டை பிளவுப்படுத்த பார்க்கின்றனர்.



 


பெரிய பதவிகளில் இருப்பவர்கள் கூட போலி வீடியோக்கள் மூலம் வன்முறையை தூண்டி விடுகின்றனர். நாட்டின் விடுதலைக்காக 33 ஆயிரம் போலீசார் வீரமரணம் அடைந்ததுப்போகதற்போது கலவரக்காரர்களிடம் போலீசார் அடிவாங்கி, காயப்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டு பின்னர் ஓட்டுவங்கி அரசியலுக்காக அவர்கள் கைவிட்டதை இப்போது எங்கள் அரசுசெய்துவருகிறது. அகதிகளாக இந்தியாவுக்கு வந்த மக்களுக்கும் ஊடுருவல் மூலம்வந்தேறியவர்களுக்கும் இடையே ஒரு மிகவும் சாதாரணமான வேறுபாடு உண்டு. வந்தேறிகள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்த மாட்டார்கள். அகதிகள் தங்களது அடையாளத்தை மறைக்க மாட்டார்கள். உலகளாவிய வகையில் முஸ்லிம் நாடுகளில் எனக்கு கிடைக்கும் ஆதரவைக்கண்டு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு கவலை ஏற்பட்டுள்ளது. உலகில் வாழும் முஸ்லிம்கள் இவருக்கு இவ்வளவு ஆதரவு அளிக்கும்போது இந்திய முஸ்லிம்களை நாம் இன்னும் எத்தனை காலம் பயமுறுத்தி அரசியல் செய்ய முடியும்? என்றகவலையில் அவர்கள் உள்ளனர். அதனால் குடியுரிமை சட்டத்தால் முஸ்லிம்களுக்கு ஆபத்து என்ற பொய்யை பரப்பி வருகின்றனர். குடியுரிமை சட்டம் மற்றும்தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு ஆகியவற்றால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு வராது. எனவே, வன்முறையான போராட்டப் பாதையை மக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


சென்னை உள்பட 10 மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்: எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்.



 


சென்னை : டிச.23சென்னை , காஞ்சிபுரம் உள்பட 10 மாவட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வழங்குகிறார். பள்ளிகளுக்கு நீண்ட தூரம் செல்லும் மாணவ மாணவிகளுக்குசிரமத்தை தவிர்க்கும்பொருட்டு தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் இலவசசைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டும் இலவச சைக்கிள்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் - நடைபெற இருப்பதால் அந்த மாவட்டங்களை தவிர்த்து சென்னை, காஞ்சிபுரம் உள்பட 10 மாவட்டங்களில் இலவச கர்நாடகா: துப்பாக்கிச் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ள து. | சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிகலந்துகொண்டு இலவச சைக்கிள்களை மாணவமாணவிகளுக்கு வழங்குகிறார். பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைசார்பாக நடைபெறும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இந்த நிகழ்ச்சியின் மூலம் சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 10 மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் கிடைக்க உள்ளது. மற்ற 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சிதேர்தல் முடிந்த பிறகு கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


கர்நாடகா: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்- எடியூரப்பா



 


பெங்களூரு: டிச.23கர்நாடகத்தின் மங்களூருவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்ரூபாய் வழங்கப்படும் என முதல் மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே,காநாடக மாநிலம் மங்களூரில் திருத்தப்பட்ட பட்ட குடியாமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மங்களூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போலீசாரை தாக்கமுற்பட்டனர். இதனால் போராட்டக்கா போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த 2 2 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில், மங்களூருவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல் மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.


தி.மு.க விரித்த வலையில் சிக்காமல் கமல்ஹாசன் தப்பிவிட்டார்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்


 



 


மதுரை:டிச.23திமுகவிரித்த வலையில் சிக்காமல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தப்பிவிட்டதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், டெல்லி, மும்பை , உத்தரபிரதேசம், தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், வரும் 23 ஆம் தேதி குடியுரிமை சட்டத்திருத்ததுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். திமுகவுடன் அதன் கூட்டண்கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்கும் என்று தெரிக்கப்பட்டது. இதையடுத்து திமுக கட்சி சார்பில், மக்கள் நீதி மய்யம்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து, போராட்டத்திற்குவருமாறு அழைப்பு விடுத்தனர். ஆனால்கமல்ஹாசன் சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதால் சென்னையில் டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் குடியுரிமைத் திருத்தச்சட்டத்திற்கு எதிரான திமுகபேரணியில் மக்கள் நீதி மய்யம்பங்கேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் நேற்று உள்ளாட்சித்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். கமல்ஹாசன் அப்போது அவர், குடியுரிமைதிருத்த சட்டம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட்ட பிறகும், மக்களின் அமைதியை சீர்குலைக்கவே, திமுக பேரணி நடத்துவதாக குற்றம் சாட்டினார். மேலும் "திமுக விரித்த வலையில் சிக்காமல்கமல் தப்பிவிட்டார்” என்றும் அவர் கூறினார்.


கடந்த 6 மாதங்களில் மத்திய மந்திரிகளின் செயல்பாடு குறித்து பிரதமர் மோடி ஆய்வு



புதுடெல்லி: டிச.23கடந்தமொதங்களில் மத்திய மந்திரிகளின் செயல்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. நரேந்திர்போடி மீண்டும் பிரதமராக ஆட்சி பொறுப்பேற்று நவம்பர் மாதத்துடன் 6 மாதங்கள் நிறைவடைந்தது. வழக்கமாக மாதந்தோறும் மந்திரிசபை கூட்டங்களுக்கு பின்னர் மத்திய மந்திரிகள் ஒன்றாக சந்தித்துக் கொள்வார்கள். கடந்த சில வாரங்களாக மந்திரிசபை கூட்டங்களின் போது பிரதமர் நரேந்திரமோடி, பல்வேறு மந்திரிகள் அரசின் கொள்கைகளை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்தார். அந்த நிகழ்வுகளில்பல மந்திரிகளும் உடன் இருப்பார்கள். ஆனால் நேற்றுபிரதமர் மோடி மந்திரிகளிடம் தனித்தனியாக அவர்களின் கடந்த6 மாதசெயல்பாடு குறித்து ஆய்வு செய்தார். குறிப்பாக வேளாண்மை , ஊரக வளர்ச்சி மற்றும் சமூக நலத்துறை ஆகிய துறைகளில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. அப்போது மந்திரிகள் தாங்கள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள், நிறைவேற்றப்பட்டதிட்டங்கள் குறித்து பிரதமரிடம்விளக்கம் அளித்தனர். காலையில் தொடங்கிய இந்த ஆய்வு மாலை வரை நீடித்தது. குடியுரிமைதிருத்தசட்டம் மற்றும் தேசிய அளவில் குடிமக்கள் பதிவேடுக்கான கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்துவரும் வேளையில் இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்தில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை.


புறநகர் ரெயில்களில் 70 ரூபாய்க்கு நாள் முழுவதும் பயணம் செய்யலாம்



 


சென்னை : டிச.23புறநகர் மின்சாரரெயிலில் ஒரு நாள் முழுவதும் பயணம்செய்யும் வகையில் பயணிகளுக்கு 70 ரூபாய்க்கு பாஸ் வழங்கப்படுகிறது. தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில் சுற்றுலாப்பயணிகள் பொது மக்களை கவரும் வகையில் ஒருநாள், 3 நாள், நாட்களுக்கான 'பாஸ்' வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் இந்த பாஸ்'கள் மூலம் பயணிகள் எளிதில் பயணம் செய்யலாம். ஒரு நாள் முழுவதும் பயணம் செய்யும் வகையில் மவகையில் 2ம்வகுப்பு ரெயில் பாஸ் ரூ.70க்கு கிடைக்கும் முதல் வகுப்பு 'பாஸ்' ரூ.295க்கு வழங்கப்படுகிறது. இந்த பாஸ்' வாங்கியவர்கள் சென்னையில் உள்ள அனைத்து மின்சாரரெயில்களிலும் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்யலாம். இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் புறநகர் மின்சார ரெயில்கள் ரெயில்களில் பாஸ்' வசதி அறிமுகம் செய்துள்ளோம். ரெயில் நிலையங்களில் ஒரு நாள், 3நாள், 5 நாட்கள் என 3 வகையான பாஸ்கள் வினியோகம் செய்யப்படும். இந்த பாஸ் மூலம் புறநகர் மின்சாரரெயில்களில்விரும்பிய இடங்களுக்கு எத்தனை முறைவேண்டுமானாலும் பயணம் செய்யலாம். இதன் மூலம் ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்கபயணிகள் காத்திருக்கும் நேரம் குறையும் ரெயில்வே நிலையங்களில்காணப்படும் நீண்ட கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


80வது திருமணநாள்: உலகில் வாழும் வயதான தம்பதியர் யார் தெரியுமா?



நியூயார்க்:டிச.23உலகில்வாழும்வயதான தம்பதியராககின்னஸ் சாதனை படைத்த ஜான் மற்றும் சார்லோட் ஹென்டர்சன் இணையர் இன்றுதங்களது 80வது திருமணநாளை கொண்டாடுகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திற்குட்பட்ட ஆஸ்டின் நகரின் அருகேயுள்ள லான்ஹார்ன் கிராமத்தில் வசிக்கும் ஜான்(106) மற்றும் சார்லோட்ஹென்டர்சன்(105) தம்பதியர் உலகில் வாழும் வயதான தம்பதியராக 'கின்னஸ்சான்றிதழ்' மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். 1934ம் ஆண்டில்டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் இவர்கள் இருவரும் முதன்முதலாக சந்தித்துக் கொண்டனர். சார்லோட்டிடம்மலர்கொத்துடன் த்துடன் ஜான் தனது காதலை வெளிப்படுத்த இருவரும் 1939ம் ஆண்டில் இரண்டாம்உலகப்போரின் தொடக்கக் உலகப்போரின் தொடக்கக் காலத்தில் திருமணம்செய்துக் கொண்டனர். இன்னும் இணைபிரியாக இன்னும் இணைபிரியாத தம்பதியர்களாக வாழும் இவர்கள் இன்றுதங்களது 80வது திருமணநாளை கொண்டா கொண்டாடுகின்றனர். திருமண உறவுகள் நீடித்து தொடர்வதற்கான ரகசியமாக 'காலக்கக்கே 'காலத்துக்கேற்ப நவீனமயமாதல்' விட்டுக்கொடுத்தல்' என்னும் தத்துவங்களை இவர்கள் குறிப்பிடுகின்றனர். திருமணத்துக்குபின்னர் இவர்கள் இருவரும் ஒருவர்மீது ஒருவர் செலுத்திய அன்பின் ஒட்டுமொத்த ஆயுள் 211 ஆண்டுகள் மற்றும் 175 நாட்கள். காலத்தின் சோதனைகளை கடந்த தெய்வீககாதல் என இலக்கியரசனையுடன் அமெரிக்க ஊடகங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன. இந்த ஜோடியை பற்றிய விபரமறிந்த நட்பு வட்டாரங்கள், இவர்கள் கடந்தகால கதைகளைப்பற்றி பேசுவதுண்டு. ஆனால், கடந்தகாலத்துக்குள்ளேயே மூழ்கி கிடப்பதில்லை என கூறுகின்றன. இத்தனை பெருமைக்குரிய இந்ததம்பதியருக்கு குழந்தைகள் ஏதும் பறக்கவில்லை. அதை ஒரு மனக்குறையாகவே கருதாமல் இருவரும்80 ஆண்டுகளாக இல்லற வாழ்க்கையை தொடக இவர்களின் சிறப்பம்சமாகும்.


கியூபா நாட்டில் 43 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் பிரதமர் நியமனம்



ஹவானா: டிச.23கியூபா நாட்டில் ஒழிக்கப்பட்ட பிரதமர் பதவிக்குமீண்டும் உயிரூட்டும் வகையில் 43 ஆண்டுகளுக்கு பின்னர் மானுவேல் மர்ரேரோவை புதிய பிரதமராக அதிபர் மிகுவேல் டயஸ் கனேல் நியமித்துள்ளார். வட அமெரிக்க கண்டத்தில் உள்ள சிறிய தீவுநாடான கியூபாவில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். அந்நாட்டின் அதிபராக பிடல் காஸ்ட்ரோ ஆட்சி செய்தபோது 1976ம் ஆண்டில் பிரதமர் பதவி ஒழிக்கப்பட்டது. அவருக்குபின்னர் அதிபராக பதவியேற்றரவுல்காஸ்ட்ரோ காலத்திலும் இதேநிலை நீடித்தது. | இந்நிலையில், 43 ஆண்டு களாகவழக்கொழிக்கப்பட்ட பிரதமர் பதவிக்கு மீண்டும் உயிரூட்டும் வகையில் 24.2.2019 அன்று கியூபா பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட் டது. இதைதொடர்ந்து, அந்நாட்டின் சுற்றுல்லாத்துறை மந்திரியான மானுவேல் மர்ரேரோவைகியூபாவின் புதிய பிரதமராக அதிபர் மிகுவேல் டயஸ் கனேல் நியமித்துள்ளார். அவரது தலைமையில் இணை மந்திரிகளை கொண்ட மந்திரிசபை நாட்டின் முக்கிய விவகாரங்களை கவனித்தாலும் அனைத்து அதிகாரங்களும் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவரான ரவுல் காஸ்ட்ரோ மற்றும் மிகுவேல் டயஸ் கனேல் ஆகியோரிடம் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 


சீனா: குடியிருப்பில் தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு


பீஜிங்: டிச.23சீனா நாட்டின் தென் பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் இன்று குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 6பேர் உயிரிமக்கனர். சீனா நாட்டின் தென் பகுதியில் குவாங்டாங் மாகாணத்துக்குட்பட்ட சோங்ஷான நகான குசேன் டவுனஷப் என்ற குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஜினான் சாலையில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வசிக்கும் பலர் நேற்றிரவு நிம்மதியாக உறங்கச் சென்றனர். நேற்று அதிகாலை அந்த கட்டிடத்தின் ஒரு வீட்டில் பற்றிய தீ மளமளவென அருகாமையில் உள்ள வீடுகளுக்கு பரவியது. தகவலறிந்து விரைந்து வந்து தீயை அணைத்த மீட்புப் படையினர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்து கிடந்த 6 பிரேதங்களை கண்டெடுத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவையில் லாரி மோதி என் யரிங் மாணவ புவி


கோவையில் மோட்டார் சைக்கிள் மீது லாரிமோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் வெள்ளைபட்டிணத்தை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவரது மகன் இம்ரான்கான் (வயது 19). இவர் கேரள மாநிலம்வேளந்தாவலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவர் அதே கல்லூரியில் படிக்கும் நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்த ஆனந்த் (19)என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவைக்கு வந்தார். பின்னர் 2 பேரும்கல்லூரிக்கு திரும்பினர். மோட்டார்சைக்கிளை ஆனந்த் ஓட்டி சென்றார். மோட்டார் சைக்கிள் ஆத்துப்பாலம்மின் மயானம் அருகே சென்றபோது ஆனந்த் முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது லாரிமோதி யது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது லாரியின் சக்கம் இம்ரான்கான் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ஆனந்தை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த தகவல்கிடைத்ததும் மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்குவரைந்து வந்தனர்.பின்னர் விபத்தில் பரிதாபமாக இறந்த இம்ரான்கானின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.


16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை


வாஷிங்டன்: டிச.2316 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை உருவாக்கி இருப்பது பற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரி வித்துள்ளார். அமெரிக்காவில் முதன் முதலாகவிண்வெளி படைதொடங்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ் போர்ஸ்' என்று அழைக்கப்படுகிற இந்த படைக்கு முதல் ஆண்டு செலவினத்துக்காக 40 மில்லியன் டாலர் (சுமார் 280 கோடி) ஒதுக்கீடு செய்யப்படும். இந்த புதிய படையை உருவாக்கி இருப்பது பற்றிடிரம்ப் கூறும்போது,"விண்வெளி படை உலகிலேயே மிகவும் புதிய படை ஆகும். நமதுதேச படைகளுக்குகடுமையான அச்சுறுத்தல்கள் இருக்கிற நிலையில், விண்வெளியில் அமெரிக்காவின் உயர்ந்த நிலை மிகவும் முக்கியம். இந்தப் படையை நாம்தான் வழிநடத்துகிறோம். மிக விரையில் நிறையவற்றுக்கு நாம் வழிநடத்தப்போகிறோம். விண்வெளிப்படை ஆக்கிரமிப்பை தடுக்கவும், இறுதி நிலத்தை கட்டுப்படுத்தவும் எங்களுக்கு உதவும்” என குறிப்பிட்டு உள்ளார். விண்வெளிப்படை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் இந்தப் படைவிண்வெளியில் வைத்திருக்கப்பட மாட்டாது. இது அமெரிக்கசொத்து களை பாதுகாக்கும், நூற்றுக் கணக்கான செயற்கை கோள்களைப் போல தகவல் தொடர்பு கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படும் என்று வாஷிங்டன் தகவல்கள் கூறுகின்றன. இந்த படைக்குவிமானப் படை தளபதிஜேரேமாண்ட் தலைமை தாங்குவார்;16 ஆயிரம் வீரர்களை கொண்டிருக்கும் என விமானப்படைமந்திரி பார்பராபேரட்கூறி உள்ளார்.


பல்கலைக்கழக பேராசிரியருக்கு தூக்கு தண்டனை: பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


இஸ்லாமாபாத்:டிச.23மதத்தைபழித்து பேஸ்புக்கில் பதிவு வெளியிட்டவழக்கில் பல்கலைக்கழக பேராசிரியருக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. பாகிஸ்தானில் முல்தான் பஹாயுதீன் ஜக்காரியா பல்கலைக்கமகக்கில் அங்கில இலக்கிய துறையில் பேராசிரியராகபணியாற்றியவர் ஜூனைத் ஹபீஸ். இவர் பேஸ்புக்' சமூக வலைத்தளத்தில் மதவிரோத கருத்துகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில் மதவிரோத கருத்துகளை வெளியிடுவது கடும் குற்றமாககருதப்படுகிறது. க செய்க. அது நிரூபிக்கப்பட்டால் தூக்குதண்டனை விதிப்பது வழக்கம் ஆகும். இந்த நிலையில் ஜூனைத் ஹபீஸ் மதவிரோதகருத்துகளை வெளியிட்ட வழக்கில் 2013ம் ஆண்டு, மார்ச் மாதம் 13 ந்தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு முல்தான் நகரில் உள்ள மாவட்ட செசன்ஸ்கோர்ட்டில் 2014 ம் ஆண்டு முதல் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய செசன்ஸ் நீதிபதி காசிப்கயயாம, ஜூனைத் ஹபீசுக்கு தூக்குதண்டனை விதித்து நேற்று பரபரப்பு தாப்பு வழங்கினார். தீர்ப்பு வழங்கினார். மேலும் அவருக்கு ரூ.5 லட்சம் அபராதமும்விதிக்கப் பட்டது. இது தொடர்பாக ஜூனைத் ஹபீஸ் வக்கீல் ஷாபாஸ்கோர் மானி கருத்து தெரிவிக்கையில், "இந்த வழக்கில் ஜூனைத் ஹபீஸ் தவறாக தண்டிக்கப்பட்டுள்ளார். அவரது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போகிறோம்” என கூறினார். தற்போது ஜூனைத் ஹபீஸ், முல்தானில் அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட மத்திய சிறையில் அடைக்கப்ப அடைக்கப்பட்டுள்ளார். இந்தவழக்கில் ஜூனைத் ஹபீசுக்காக முதலில் ஆஜராகி வாதாடிய வக்கீல் ரஷீத் ரகுமான் 2014ம் ஆண்டு, மே மாதம் தனது அலுவலகத்தில் இருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டதும், இந்த வழக்கு விசாரணை காலத்தில் 9 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த ஆசிப் சயீத் கோசாவுக்கு ஜூனைத்ஹபீஸ்பெற்றோர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒருகடிதம் எழுதினர். அதில் தங்கள் மகன் முல்தானில் தனிமைச்சிறையில் 6 ஆண்டுகாலமாக வாடிக் கொண்டிருப்பதாகவும், அவருக்கு நீதி வழங்கச்செய்யுமாறும் கேட்டுக்கொண்டனர். பாகிஸ்தானில் கடந்த 2017 ம் ஆண்டு, அப்துல் வாலிகான் பல்கலைக்கழக மாணவர் மாஷல் கான் என்பவர் சமூக வலைத்தளங்களில் மத விரோத கருத்துகளை வெளியிட்டதற்காக அடிக்கக்கொல்லப்பட்ட நினைவுகூரத்தக்கது.