குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சிறப்பு பிரச்சாரம் குடும்பங்களை சந்திக்க

3 கோடி குடும்பங்களை சந்திக்க திட்டம்


மாநிலங்களவை உறுப்பினர் புபேந்திர யாதவ் தகவல்


ஜெய்ப்பூர்:டிச.22- வரவிருக்கும் 10 நாட்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகசிறப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்து 3 கோடி குடும்பங்களை தொடர்புகொள்ள பாஜக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியைச்சேர்ந்த புபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். மத்திய அரசுகொண்டு வந்துள்ள குடியுரிமைசட்ட திருத்தத்துக்குநாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தசட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியிலும் போராட்டம் நடந்துவருகிறது. உத்தரபிரதேசத்தில் போலீசாருக்கு போராட்டக்காரர்களுக்கும் நடைபெற்றபோராட்டத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் நடந்து வரும் கலவரத்தை ஒடுக்குவது தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தியது.


 



குடியுரிமைசட்ட திருத்தத்தை எக்காரணம் கொண்டும் திரும்ப பெற போவதில்லை என்பதில் பாரதிய ஜனதா உறுதியாக உள்ளது. அதேசமயத்தில் தற்போது இந்த சட்ட திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்களிடம் கருத்துக்கள் கேட்டு குடியுரிமை சட்டத்தில் மேலும் திருத்தங்கள் செய்ய பா.ஜ.க. தீர்மானித்துள்ளது. இந்நிலையில்,வரவிருக்கும் 10 நாட்களில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு திங்க ஆதரவாக பாஜக சிறப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்து 3 கோடி குடும்பங்களை தொடர்புகொள்ள உள்ளதாகவும், இந்தச்சட்டக்கை கரிக்க 250 க்கும் மேற்பட்ட இடங்களில் பத்திரிகையாளர் சந்திப்புகளை - நடத்த உள்ளதாகவும் மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினரான பாஜகவை சேர்ந்தபுபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.


எங்கள் பொருளாதார இலக்கு கானல் நீரல்ல, எட்டக் கூடியதுதான்: பிரதமர் மோடி உறுதி 


 



 


புதுடெல்லி: டிச.22இந்தியாவை ரூ.350 லட்சம்கோடி பொருளாதார நாடாக மாற்றும் எங்கள் இலக்கு கானல் நீரல்ல, எட்டக்கூடியதுதான் என்று பிரதமர் மோடி கூறினார். இந்திய தொழில், வர்த்தக சபையின் (அசோசெம் வருடாந்திர மாநாடுடெல்லியில் நேற்று நடைபெற்றது. வர்த்தகசபை 100 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி சிறப்பு தபால்தலையை பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டார். விழாவில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது: இந்திய பொருளாதாரத்தை முன்னேற்ற நாங்கள் கடுமையாக பணிபுரிந்து வருகிறோம். இப்போது எங்கள் கவனம் ரூ.350 லட்சம் கோடி.


டிரில்லியன் அமெரிக்க டாலர்)பொருளாதார நாடு என்ற இலக்கை அடைய வேண்டும் என்பதே. இது கானல் நீரல்ல, இதை அடைவதற்கான தகுதி எங்களிடம் இருப்பதால், இந்த சவாலை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. இந்த இலக்கை அடைவதற்காக வலுவான அடித்தளம் அமைத்துள்ளோம். எளிதாக தொழில்தொடங்குவதற்கான நாடுகள் பட்டியலில் இந்தியாவின் தகுதி கடந்த 3 ஆண்டுகளாக நிலையாக உயர்ந்துவருகிறது.


நீங்கள் இரவு, பகலாக கடுமையாக உழைப்பதாலும், கொள்கைகளில் மாற்றம் கொண்டுவந்ததாலும் இந்த தகுதி உயர்ந்துவருகிறது. 56 ஆண்டுகளுக்கு முன்பு குமுன்பு நமது பொருளாதாரம் பேரழிவை நோக்கி சென்றது. எங்கள் அரசு அதனை நிலைப்படுத்தி, அதில் ஒரு ஒழுங்கை கொண்டுவரமுயற்சி மேற்கொண்டது. தொழில் துறையில் 10 ஆண்டுகளுக்கு முந்தைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்கவனம் செலுத்தினோம். பொருளாதாரம் தொடர்பான பல துறைகளை அரசு ஒழுங்குமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டது. பொருளாதாரவளர்ச்சியை வேகப்படுத்ததொழில்நுட்பத்தை நாளை கிறிஸ்துமஸ்


நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வங்கித்துறைகள் முன்னேற்றம் அடைந்துள்ளது. வங்கி செயல்பாடுகளில் அரசாங்கம் தலையிடுவதை முடிவுக்குகொண்டுவந்தோம். கம்பெனிகள் சட்டத்தில் குறிப்பிட்ட விதிகளை தவறாக நிர்வகித்தால் இப்போது குற்ற நடவடிக்கை இல்லை. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, திறன், பொறுப்புடைமை ஆகியவற்றை கொண்டுவந்துள்ளோம். மின்னணு முறையிலான வரி நிர்வாகத்தை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறோம். உலகளவிலான போட்டியை எதிர்கொள்ள தரத்தை உயர்த்துவது கட்டாயம்.


அ.தி.மு.க சார்பில் நாளை கிறிஸ்துமஸ் விழா: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்



 


சென்னை : டிச.22சென்னை கீழ்ப்பாக்கத்தில் 23ந்தேதி அ.தி.மு.க. சார்பில்கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். அ.தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர்களை பார்ப்பதற்காக இந்த ஆண்டு அ.தி.மு.க. சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் நேர்ச்சைத் திருத்தலம், புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட உள்ள து. | வருகிற 23ந்தேதி (திங்கட் கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை இந்த விழா நடக்கிறது. இந்தகிறிஸ்துமஸ் விழாவில் முதல் அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். கிறிஸ்துமஸ்விழா கேக் வெட்டிகொண்டாடப்படுகிறது. விழாவில்பங்கேற்பவர்களுக்கும்,  கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கும் கேக் வழங்கப்படுகிறது. 


 


நடிகர்களை பார்ப்பதற்காக கூட்டம் வரும் என்பதால், பேரணியில் பங்கேற்க நடிகர் சங்கத்திற்கு திமுக அழைப்பு: அமைச்சர் ஜெயக்குமார்


 



சென்னை , டிச.22நடிகர்களை பார்ப்பதற்காக கூட்டம் வரும் என்பதால், பேரணியில் பங்கேற்க நடிகர் சங்கத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். தனியார் அமைப்பு சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா சென்னை மூலகொத்தளம் பகுதியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டதோடு மாணவர்களுக்குவினாடி வினா போட்டி நடத்தி பரிசுகளும் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தைபிரிப்பது குறித்த மு.க.ஸ்டாலினின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதிமுககட்சி கொடியிலேயே அண்ணாவை வைத்துள்ளதாகவும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தாங்கள் நடப்பதாகவும் தெரிவித்தார். நடிகர்களை பார்ப்பதற்காக கூட்டம் வரும் என்பதால், பேரணியில் பங்கேற்க நடிகர் சங்கத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது எனவும் கூறினார்.


டிசம்பர் 26ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம்வெறும் கண்களால் பார்க்க கூடாது சென்னை : டிச.22சென்னையில்பகுதி அளவிலும்



 


 


சென்னை : டிச.22தமிழகத்தில் வரும் 26ம் தேதி நெருப்புவளையத்துடன் சூரியகிரகணம் தோன்றுகிறது. அதனை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியன், நிலவு, பூமி என மூன்றும் நேர் கோட்டில் இருக்கும் போது சூரிய வெளிச்சத்தை நிலவு மறைக்கிறது. பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை நிலவு மறைக்கும்காட்சி தென்படும். சூரியனை முழுவதுமாக நிலவு மறைத்தால் அதுதான் முழு சூரிய கிரகணம் அவ்வகையில் இந்த பொருளாதாரத்துக்காகவே வங்கதேசம்ஆண்டின் கடைசிகிரகணமாக, டிசம்பர் 26ஆம்தேதியன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்னும் அரிய சூரிய கிரகண நிகழ்வு தோன்றுகிறது. இதுபற்றி முதுநிலை விஞ் ஞானி வெங்கடேஸ்வரன் கூறுகையில், டிசம்பர் 26ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது. காலை 8 மணியில் இருந்து 3 மணிநேரம் சூரிய கிரகரணம்தெரியும். கோவை தெளிவாகவும் சென்னையில்பகுதி அளவிலும் கிரகணம்தெரியும். அவினாசி, ஈரோடு, கரூர், சிவகங்கை உள்ளிட்ட 10 இடங்களில் தெளிவான சூரிய கிரகணம் தெரியும். சூரிய கிரகணத்தை எப்போதும் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. கிரகணத்தின்போது உணவு உட்கொள்ளலாம், உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாது' என்றார். சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்காக, மாநிலம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகளை தமிழ் நாடு அறிவியல் இயக்கம் செய்துவருகிறது.


கர்நாடகா புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் நாளை பதவியேற்பு



 


 


பெங்களூரு: டிச.22கர்நாடகாவில்சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுபுதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நாளை காலை பதவியேற்க உள்ள னர். கர்நாடகாசட்டசபையில் காலியாக உள்ள 15தொகுதி களுக்கு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் இந்த இடைத்தேர்தலில் 70 சதவீதவாக்குகள் பதிவாயின. இந்த இடைத்தேர்தலில் 12 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும், சுயேட்சை ஒருதொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், கர்நாடகா இடைத்தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நாளை காலை பதவியேற்க உள்ளனர். இதுதொடர்பாக வெளி யான செய்தியில், கர்நாடகா சட்டசபை விதான் சவுதாவில் புதிதாகதேர்வு செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏ.க்க ளும் நாளை காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளனர். சபாநாயகர் விஷ்வேஷ்வரா ஹெக்டே, முதல் மந்திரி எடியூரப்பா உள்படபலர் இதில் பங்கேற்கின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய 'கிங் கோலி



 


 


கிறிஸ்துமஸ் கொல்கத்தா:டிச.22கொல்கத்தாவில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்திற்குகிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சென்ற கிரிக்கெட் வீரர் விராட் கோலி அங்கிருந்த குழந்தைகளை இன்பவெள்ளத்தில் ஆழ்த்தினார். இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட்போட்டி கொல்கத்தாவில் நாளை நடைபெறஉள்ளது. இதற்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கிடையில், உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ்பண்டிகை வரும்புதன்கிழமை (டிசம்பர் 25)கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்படுகள் உலகம் முழுவதும் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி கொல்கத்தாவில் உள்ள ஒரு 'ஒரு காப்பகத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் தனது கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார். அந்த குழந்தைகள் காப்பகத்திற்குகிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து சென்றகோலி குழந்தைகள் விரும்பிய பரிசுகளை கொடுத்து மகிழ்வித்தார். இறுதியில், குழந்தைகளிடம் உங்களுக்கு கிரிக்கெட் வீரரை பார்க்க விருப்பமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு ஆம் என குழந்தைகள் பதிலளித்தனர். இதையடுத்து, தனது கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தைவிராட்கோலி கலைத்தபோது அங்கிருந்த குழந்தைகள் அனைவரும் இன்பவெள்ளத்தில் ஆழ்ந்த னர். பின்னர் அந்த குழந்தை களுடன் இணைந்து கோலி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். கோலி ஆதரவற்ற குழந்தைகளுடன் கிருஸ்துமஸ்கொண்டாடிய வீடியோவைஸ்டார்ஸ்போர்ட்ஸ் தனது அதிகாரப்பூர்வடுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.


டோனியின் அறிவுரையை பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது: சாம் கரன்



 


 


சென்னை :டிச.22சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி தலைமையில்விளையாட ஆர்வமாக உள்ளேன் என இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் சாம் கரென் தெரிவித்துள்ளார். 13வது ஐபிஎல் டி20 கிரிக்கெட்போட்டி தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இதில் வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு என பல மாற்றங்கள் முடிந்ததையடுத்துவீரர்கள் ஏலம் நேற்று முன்தினம் என் கொல்கத்தா நகரில் நடந்தது. இதில் 146வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் உள்பட மொத்தம் 338 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். 8 ஐபிஎல் அணிகளுக்கும் அதிகபட்சமாகமொத்தம் 73 வீரர்கள் தேவைப்பட்டனர். ஆ ஆனால் 29வெளிநாட்டவர் உள்பட 62 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதற்காக 8 அணிகள் ரூ.140கோடியே 30 லட்சம் செலவிட்டன. இந்நிலையில் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் அறிவுரையை பெற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என அந்த அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம்கரன் தெரிவித்துள்ளார். 'சென்னைக்கு வந்து எனது புதிய அணி வீரர்களை சந்திக்க ஆர்வமாக உள்ளேன். அனுபவம் வாய்ந்த வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திரசிங்டோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரின் ஆலோசனைகளை பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. டோனியின் தலைமையில் விளையாடவும் ஆர்வமாக உள்ளேன். நிச்சயம் கோப்பையை கைப்பற்றி சென்னை ரசிகர்களுக்கு விருந்தளிப்போம்' என சாம் கரன் தெரிவித்தார். இங்கிலாந்துகிரிக்கெட் அணி வீரர்களில் அதிக தொகைக்கு (ரூ.5.5கோடி) ஏலம் எடுக்கப்பட்ட வீரர் சாம் கரன் என்பது குறிப்பிடத்தக்கது.


உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகளை விதித்தது மாநில தேர்தல் ஆணையம்



 


 


சென்னை : டிச.22தமிழகத்தில் நடைபெறஉள்ள உள்ளாட்சித்தேர்தலுக்கான கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் டிசம்பர் 27, 30ம்தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்நிலையில், தமிழக உள்ளாட்சித்தேர்தலுக்கான தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலை6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒல் ஒலிபெருக்கி பயன்படுத்த மலை வேண்டும். போலீசார் அனுமதி பெற்று ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும். பொது, தனியார் சுவர்களில் பிரசாரவிளம்பரம் செய்யக் கூடாது. தனியாரிடம் அனுமதி பெற்று இருந்தாலும் சுவர் விளம்பரம்செய்யக்கூடாது போன்றகட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


ஹோண்டுராஸ்: சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலில் 18 பேர் பலி


 



 


இடையே டெகுசிகல்பா :டிச.22ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள ஒருசிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலில் 18 பேர் உயிரிழந்தனர். மத்திய அமெரிக்க நாடு களில் ஹோண்டுராஸ் நாடும் ஒன்றாக உள்ளது. அந்நாட்டில் உள்ள டெலா என்ற நகரில் ஒருசிறைச்சாலை அமைந்துள்ளது. இந்தசிறைச்சாலையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்த சிறைச்சாலையில் நேற்று சிறைச்சாலையில் நேற்று இரு தரப்பு கைதிகளுக்கு இடையே திடீரென பயங்கர மோச மோதல் வெடித்தது. இந்த மோதலில் 18 கைதிகள் உயிரிமங்கள் உயிரிழந்தனர். மேலும், பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, துரிதமாக செயல்பட்டசிறைத்துறை போலீசார் கைதிகளின் மோதலை தடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், காயமடைந்த நபர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த மோதல் சம்பவம் குறித்து விசாரணை மேற கொண்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஐதராபாத் என்கவுண்டர் 4 குற்றவாளிகளின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு


 



ஐதராபாத்: டிச.22ஐதராபாத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட கற்பழிப்பு குற்றவாளிகள் 4 பேரின் உடல்களை மறு உடல் கூராய்வு செய்ய தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சாம்ஷாபாத் பகுதியை சேர்ந்த பெண் கால்நடை டாக்டர் கடந்த மாதம் 27ம் தேதி 4 நபர்களால் கற்பழித்து எரித்துகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், பெண்டாக்டரைகற்பழித்து கொலை செய்த 4 பேரை போலீசார் கடந்த 29ம்தேதி கைது செய்தனர். குற்றவாளிகளை 15 நாட்கள் சிறையில் அடைக்கவும், அதில் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதற்கிடையில், போலீசார் விசாரணை தொடர்பாக டிசம்பர் 6ம்தேதி அதிகாலை குற்றவாளிகள் 4 பேரையும் பெண் டாக்டரை எரித்துக் கொன்ற இடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது குற்றவாளிகள் 4 பேரும் திடீரென போலீசாரின் ஆயுதங்களை பறித்தும், கற்களால் தாக்கியும் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் குற்றவாளிகள் 4 பேரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து,என்கவுண்டரில் கொல்லப்பட்ட 4 குற்றவாளிகளின் உடல்கள் ஐதராபாத் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையில், இந்த என்கவுண்டர் தொடர்பாகசமூக ஆர்வலர்கள் சார்பில்டிசம்பர் 6ம்தேதியே தெலுங்கானா ஐகோர்ட்டில் அவசரவழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கை விசாரித்த ஐகோர்ட் என்கவுண்டர் செய்யப்பட்ட 4 பேரின் உடல்களை பதப்படுத்திவைக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது. இந்நிலையில், இந்த என்கவுண்டர் தொடர்பாக ஐகோர்ட் நேற்றுமீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, என்கவுண்டர் செய்யப்பட்டுஹைதராபாத் அரசு மருத்துவமனையில் பதப்படுத்திவைக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளின் உடல்களை மறுஉடல் கூராய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.