கொள்ளுப் பேரனுடன் உணவு தயாரிக்கும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்
லண்ட ன்: டிச.23இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது கொள்ளுப் பேரனுடன் கிறிஸ்துமஸ் உணவு தயாரிக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகைடிசம்பர் 25ம்தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது மகன் சார்லஸ்,பேரன் வில்லியம், கொள்ளுப்பேரன் ஜார்ஜுடன் இணைந்து சமைக்கும் புகைப்படங்களை பக்கிங்காம் அரண்மனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. (இங்கிலாந்து அரச குடும்பத்தின் 4 தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகக் காட்சி அளிக்கும் இந்த புகைப்படங்கள் விற்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாய் முன்னாள் ராணுவ அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு இன்று விடுமுறை ரத்து: போக்குவரத்து கழகம்
சென்னை : டிச.23சென்னையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்றுவிடுப்பு எடுக்க போக்குவரத்துகழகம் தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் குடியுரிமை திருத்தசட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தன. அசாம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கலவரம் டெல்லிக்கும் பரவியது. தலைநகர் டெல்லியின் சீலாம்பூர்,ஜாப்ராபாத்பகுதிகளில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. தற்போதுபோராட்டங்கள் குறைந்துவட மாநிலங்களில் அமைக்கிரும்பி வருகிறது இதற்கிடையே, குடியுரிமை திருத்தசட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 23ம் தேதி தி.மு.க. மற்றும் அதன் தோழமைகட்சிகள் பேரணி நடத்த முடிவானது. இந்நிலையில், சென்னையில் அரசுபோக்குவரத்துகழக ஊழியர்கள் நாளை விடுமுறை எடுக்க போக்குவரத்துகழகம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாகபோக்குவரத்துகழகமேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்று வழங்கப்பட்டவிடுமுறைரத்து செய்யப்படுகிறது. அதனால் அவர்கள் வழக்கம்போல் நாளை கட்டாயம் பணிக்கு விடுமுறை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுதமாலாவில் சோகம்: பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் பலி
கவுதமாலா சிட்டி: டிச.23கவுதமாலா நாட்டில் பயணிகள் பஸ் ஒன்று விபத்தில்சிக்கியதில் 20பேர் பரிதாபமாக பலியானது அங்கு சோகத்தைஏற்படுத்தியுள்ளது. கவுதமாலா நாட்டில் வடகிழக்குபீட்டன் பகுதியில் இருந்து தலைநகர் நோக்கி பயணிகள் பஸ் ஒன்றுசென்று கொண்டிருந்தது. இந்நிலையில்,கவுதமாலா சிட்டியில் இருந்து கிழக்கே 150 கி.மீ. தொலைவில் கவுலான நகராட்சிபகுதியில் கவுலான் நகராட்சிபகுதியில் சென்றபோது, பஸ்சின் பின்புறம் லாரி ஒன்று வேகமாக மே வேகமாக மோதி விபத்து ஏற்படுத்தியது. இந்த கோரவிபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.இதில் 18வயதுக்கு உட்பட்ட 9 பேரும் அடங்குவர்மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவம் பதிலடி
ஸ்ரீநகர்:டிச.23- 1 ஜம்முகாஷ்மீரின் ரஜோரி, பூஞ்ச்பகுதிகளில்பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அவர்கள் இந்திய எல்லைகளை நோக்கி சிறிய அளவிலான கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. | இதேபோல், ஜம்முகாஷ்மீரின் மெண்டார், கிருஷ்ணாகட் மற்றும் பூஞ்ச் பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
3வது ஒருநாள் போட்டி டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
சென்னை : டிச.23வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சைதேர்வு செய்துள்ளது. இந்தியா வெஸ்ட் இண்டீஸ் மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று பகல் இரவு மோதலாக நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு . செய்தார். இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில்பேட்டிங் செய்கிறது. இரு அணிகளின் பட்டியல் வருமாறு: இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட்,கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, நவ்தீப் சைனி, குல்தீப்யாதவ், முகமதுஷமி, ஷர்துல் தாக்குர் வெஸ்ட் இண்டீஸ்: எவின் லெவிஸ், ஷாய் ஹோப், ஹெட்மயர், நிகோலஸ் பூரன்,கீரன் பொல்லார்ட் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், காட்ரெல், ஜாசன் ஹோல்டர், கீமோ பால், அல்ஜாரி ஜோசப், கேரி பியரி.
இந்தியாவில்தான் பாதுகாப்பு அச்சுறுத்தல் மிக, மிக அதிகம்: பாக். கிரிக்கெட் போர்டு தலைவர்
டிச.23பாகிஸ்தான் பாதுகாப்பானது என்பதை நாங்கள் நிரூபித்து விட்டோம் என்று அந்நாட்டு கிரிக்கெட் போர்டு தலைவர் எஹ்சான்மானி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மண்ணில் கடந்த 2009ம் ஆண்டுக்குப்பின் தற்போது 10 வருடங்கள் கழித்து டெஸ்ட் தொடர் நடைபெற்றது. எந்த அணி அங்குவிளையாடும்போது தாக்குதல் நடத்தப்பட்டதோ, அந்த அணியே தற்போது பாகிஸ்தான் சென்றது. நேற்றுடன் முடிவடைந்த டெஸ்ட் தொடரைபாகிஸ்தான் 10 எனக் கைப்பற்றியது. இதனால் பெரும்பாலான அணிகள் பாகிஸ்தான் சென்றுவிளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. இலங்கையை தொடர்ந்து உலகடெஸ்ட்சாம்பியன்ஷிப்பின் கீழ் வங்காளதேச அணி பாகிஸ்தான் சென்றுவிளையாட இருந்தது. கடைசி நேரத்தில் பாதுகாப்பை காரணம் காட்டி வங்காளதேசம் பாகிஸ்தான் செல்ல மறுத்தது. இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட்போர்டு தலைவர் எஹ்சான் மானி இந்தியா மீது தாக்கியுள்ளார். இதுகுறித்து எஹ்சான் மானி கூறுகையில்"பாகிஸ்தான் பாதுகாப்பானது என்பதை நாங்கள் நிரூபித்துவிட்டோம். எந்த அணி பாகிஸ்தான் வர மறுக்கிறதோ, அந்த அணி இங்கு பாதுகாப்பை இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இந்த நேரத்தில் பாகிஸ்தானை விட இந்தியா மிகமிக அதிகமான பாதுகாப்பு அச்சுறுத்தல் நாடு. இலங்கை தொடருக்குப்பின் எந்தவொரு நாடும்பாதுகாப்பு ஏற்பாட்டைபற்றி கவலைப்பட முடியாது. பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெற இது திருப்புமுனை.மீடியாக்களும், ரசிகர்களும் உலகளவில் பாகிஸ்தானை நேர் மறையாக காட்டுவதற்கு முக்கிய பங்காற்றினர்” என்றார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி
காபுல்: டிச.23ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 50.64 சதவீதம் வாக்குகளை வாங்கி அதிபர் (அஷ்ரப்கானிமீண்டும் வெற்றி பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தான் அதிபர் (பதவிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 28ம்தேதி நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் அதிபர் அஷ்ரப் கானி 9 லட்சத்து 23 ஆயிரத்து 868 (50.64சதவீதம் வாக்குகளை வாங்கி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா அப்துல்லா 39.52 சதவதமவாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.
கர்நாடகா: புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்
பெங்களூரு: டிச.23கர்நாடகாவில்சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நேற்று காலை பதவியேற்றனர். கா நாடகாசட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதி களுக்கு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் 70 சதவீதவாக்குகள் பதிவாயின. இந்த இடைத்தேர்தலில் 12தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ்கட்சி 2 தொகுதிகளிலும், சுயேட்சை ஒருதொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், கர்நாடகா இடைத்தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நேற்றுகாலை பதவியேற்றனர். கர்நாடகா மாநிலசட்டசபை விதான் சவுதாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏ.க்கள் காலை 10 மணிக்கு பதவியேற்றனர். இந்த நிகழ்ச்சியில்சபாநாயகர் விஷ்வேஷ்வராஹெக்டே உள்படபலர் பங்கேற்றனர்.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி.யை வளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
வாஷிங்டன்: டிச.23அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி. பிரமிளாஜெயபாலை சந்திக்க மறுத்த இந்திய வெளியுறவு மந்திரிஜெய்சங்கரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் அந்த நாட்டின் நாடாளுமன்ற குழு ஒன்றை சந்திக்க ஏற்பாடு ஆகி இருந்தது. ஆனால் அந்த குழுவில், இந்திய வம்சாவளி பெண் எம்.பி.பிரமிளாஜெயபால் இடம் பெற்றிருந்ததால், அந்தக் குழுவையே சந்திக்க ஜெய்சங்கர் மறுத்துவிட்டார். ததுவிட்டார். இதற்குகாரணம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியல்சாசன பிரிவு 370ஐ இந்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில், அங்குகொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகளை இந்தியா கட்டுப்பாடுகளை இந்தியா விலக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரமிளா ஜெயபால் தீர்மானம் கொண்டு வந்ததுதான். இதை நிருபர்கள் மத்தியில் பேசியபோது ஜெய்சங்கர் ஒப்புக்கொண்டார். ஜெய்சங்கரின் இந்த செயல், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் ஜனநாயக கட்சியை சேர்ந்த பிரமிளா ஜெயபாலுக்கு ஆதரவாக, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அந்த கட்சி சார்பில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிற செனட்சபை எம்.பி.க்கள் பெர்னி சாண்டர்சும், எலிசபெத்வாரனும்மேலும் 2 எம்.பி.க்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். அவர்கள், அமெரிக்க எம்.பி.க்களின் குரலை ஒடுக்க ஜெய்சங்கரும், இந்தியாவும் முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
ஜி.எஸ்.டி. வரி உயருமா? மந்திரிகள் குழு அமைப்பாளர் 6 விளக்கம்
புதுடெல்லி: டிச.23ஜி.எஸ்.டி. வரி குறித்து ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.க்கான மந்திரிகள் குழுவின் அமைப்பாளரும், பீகார் மாநில துணை முதல் மந்திரியுமான சுஷில் குமார் மோடி விளக்கம் அளித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்படும் என்றுதகவல்வெளியாகி வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக,ஒருங்கிணைந்த க ஜி.எஸ்.டி.க்கான மந்திரிகள் குழுவின் அமைப்பாளரும், பீகார் மாநில துணை முதல் மந்திரியுமான சுஷில் குமார் மோடி விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் அவர் பேசியதாவது: ஜி.எஸ்.டி. உயரும் என்று வெளியாகும் தகவல்கள் தவறானவை. ஜி.எஸ்.டி. வருவாய் ஸ்திரத்தன்மை அடையும்வரை,வரிவிகிதத்தை உயர்த்தவோ, குறைக்கவோ முடியாது. பொருளாதார மந்தநிலை நிலவும்போது,வரியை குறைக்க முடியாவிட்டால், அதை உயர்த்தவும் கூடாது. மேலும், ஜி.எஸ்.டி.யை ஆண்டுக்கு ஒரு தடவை மாற்றி அமைத்தால் போதும், ஒவ்வொரு கூட்டத்திலும் மாற்றவேண்டியது இல்லை என்றுகடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் பேசினார்.